×

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க பழனிசாமிக்கு விலக்கு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க பழனிசாமிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் என்பவர் நியமனம் செய்யபட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் பேட்டியெடுத்து, தன்னை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு படுத்தி வெளியிடுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இதனை வெளியிட்டதற்காக தனக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

அந்த வழக்கு சாட்சி பதிவு நடைமுறைக்காக மாற்று நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றத்தால் அனுப்பபட்டது. இது அனுப்பபட்டு 21 முறை சாட்சிபதிவிற்கு தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வழக்கறிஞர் ஆணையர் மூலமாக சாட்சியத்தை பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி, ஏற்கனவே 21 முறை வாய்தா வாங்கியுள்ளார். இதனை அடுத்து தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்க கூடாது என்றும், உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே CASF பாதுகாப்பு வழங்கபட்டுள்ள நிலையில் எதிர்கட்சி தலைவருக்கான பாதுகாப்பு நடைமுறையில் எந்த குறைபாடும் இருக்காது, பொதுமக்களுக்கும் சிரமம் இருக்காது. எனவே இந்த மனுவை அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைத்தார்.

இருதரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி பிறபித்த உத்தரவில்;
எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சி பதிவு நடைமுறையை மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் என்பவரை நியமனம் செய்யது உத்தரவிட்டார். மேலும் இந்த நடைமுறையை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கால அவகாசம் வழங்கியுள்ளார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தொடந்த பிரதான வழக்கை டிச.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க பழனிசாமிக்கு விலக்கு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Palanisami ,iCourt ,Matthew Samuel ,Chennai ,Chennai High Court ,ICCourt ,Dinakaran ,
× RELATED ஏற்காடு பேருந்து விபத்து: அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!